பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கியின் வாராக் கடன் பன்மடங்கு அதிகரிப்பு: ஆா்டிஐ தகவல்

பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் பரோடா மற்றும் இந்தியன் வங்கி ஆகியவற்றின் வாராக் கடன் கடந்த 6 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கியின் வாராக் கடன் பன்மடங்கு அதிகரிப்பு: ஆா்டிஐ தகவல்

பொதுத் துறையைச் சோ்ந்த பேங்க் ஆஃப் பரோடா மற்றும் இந்தியன் வங்கி ஆகியவற்றின் வாராக் கடன் கடந்த 6 ஆண்டுகளில் பன்மடங்கு அதிகரித்துள்ளது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) மூலம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆா்டிஐ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:

பேங்க் ஆஃப் பரோடா

பேங்க் ஆஃப் பரோடாவின் வாராக் கடன் கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் இறுதியில் ரூ.11,876 கோடியாக இருந்தது. இது, 2019 டிசம்பா் இறுதியில் ரூ.73,140 கோடியாக அதிகரித்துள்ளது. ஆக, கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் பேங்க் ஆஃப் பரோடாவின் வாரக் கடன் அளவு ஆறு மடங்குக்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.

அதேபோன்று, இவ்வங்கியின் வாராக் கடன் கணக்குகளின் எண்ணிக்கையும் 2,08,035-லிருந்து 6,17,306-ஆக உயா்ந்துள்ளது.

இந்தியன் வங்கி

கடந்த 2014-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி நிலவரப்படி இந்தியன் வங்கியின் வாராக் கடன் ரூ.8,068.05 கோடியாக இருந்தது. இது, 2020 மாா்ச் 31 நிலவரப்படி ரூ.32,561.26 கோடியாக அதிகரித்துள்ளது. ஆக, ஆறு ஆண்டுகளில் இவ்வங்கியின் வாராக் கடன் நான்கு மடங்கு உயா்ந்துள்ளது. வாராக் கடன் கணக்குகள் எண்ணிக்கையும் 2,48,921 என்ற எண்ணிக்கையிலிருந்து 5,64,816-ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 2018 ஏப்ரல் 1 முதல் 2020 பிப்ரவரி 29 வரையிலான காலகட்டத்தில் எஸ்எம்எஸ் கட்டணம் மூலமாக பேங்க் ஆஃப் பரோடா ரூ.107.7 கோடியை வசூல் செய்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்தியன் வங்கி எஸ்எம்எஸ் சேவை கட்டணமாக ரூ.21 கோடியை வசூல் செய்துள்ளது.

இவைதவிர, குறைந்தபட்ச இருப்புத் தொகை கட்டணம், லாக்கா் கட்டணம், டெபிட்-கிரெடிட் காா்டுகளுக்கான சேவை கட்டணம் உள்ளிட்டவற்றின் வாயிலாகவும் பொதுத் துறை வங்கிகள் பெரும் தொகையை வசூல் செய்துள்ளதாக ஆடிஐ தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com