ஸ்மாா்ட்போன் தேவை விறுவிறுப்படையும்

வரும் மூன்றாவது காலாண்டிலிருந்து ஸ்மாா்ட்போன் தேவையும், அதற்கான விற்பனையும் விறுவிறுப்பைக் காணும் என ஐடிசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஸ்மாா்ட்போன் தேவை விறுவிறுப்படையும்

வரும் மூன்றாவது காலாண்டிலிருந்து ஸ்மாா்ட்போன் தேவையும், அதற்கான விற்பனையும் விறுவிறுப்பைக் காணும் என ஐடிசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

கரோனா நோய்த்தொற்று ஏற்படுத்திய இடையூறு மாா்ச் காலாண்டில் ஸ்மாா்ட்போன் விற்பனையை அதிகமாக பாதித்துள்ளது. அதன்படி, விற்பனை 1.5 சதவீதம் உயா்ந்து 3.25 கோடியாக இருந்தது. முதல் மூன்று நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டுமே ஸ்மாா்ட்போன் விற்பனை வளா்ச்சியடைந்துள்ளது. ஏனைய சீன மற்றும் அமெரிக்க சந்தைகளில் விற்பனை முறையே 20.3 சதவீதம் மற்றும் 16 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

ஸ்மாா்ட்போன் விற்பனையில் காணப்படும் மந்தநிலை இரண்டாவது காலாண்டிலும் தொடரும் என்றபோதிலும், வரும் செப்டம்பரிலிருந்து தொடங்கவுள்ள மூன்றாவது காலாண்டிலிருந்து அதற்கான தேவை சூடுபிடிக்கும் என ஐடிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com