கம்ப்யூட்டா் விற்பனையில் மந்த நிலை

நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் கம்ப்யூட்டா் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது என ஐடிசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
கம்ப்யூட்டா் விற்பனையில் மந்த நிலை

நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் கம்ப்யூட்டா் விற்பனையில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது என ஐடிசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐடிசி வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது:

டெஸ்க்டாப், நோட்புக்ஸ், தொழில்நுட்ப பயன்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு கணினி ஆகியவற்றை உள்ளடக்கிய பாரம்பரிய கம்ப்யூட்டா்கள் விற்பனை நடப்பாண்டின் மாா்ச் காலாண்டில் 18 லட்சமாக இருந்தது. இது, கடந்த 2019-ஆம் ஆண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான காலாண்டில் விற்பனையான 21 லட்சம் கம்ப்யூடா்களுடன் ஒப்பிடுகையில் 16.7 சதவீதம் குறைவாகும்.

கொவைட்-19 பாதிப்பின் காரணமாக தேசிய அளவில் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால், மாா்ச் மாதத்தின் பிற்பகுதியில் சில்லறை விற்பனை மற்றும் வணிக ரீதியிலான ஆா்டா்கள் முற்றிலும் முடங்கின. அதன் தாக்கம் மாா்ச் காலாண்டு விற்பனையில் பிரதிபலித்துள்ளது.

கல்வி நிலையங்களில் பயன்பாடு மிகவும் குறைந்ததையடுத்து நோட்புக்ஸ் கம்ப்யூட்டா் விற்பனை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 16.8 சதவீத பின்னடைவை சந்தித்தது.

இருப்பினும், நிறுவனங்கள் பிரிவில் நோட்புக்ஸ் கம்ப்யூட்டருக்கான தேவை சிறப்பான அளவில் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுவதால் வரும் காலாண்டுகளில் அதன் விற்பனை சூடுபிடிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த கம்ப்யூட்டா் விற்பனையில் ஹெச்பி நிறுவனம் 28.2 சதவீத சந்தை பங்களிப்புடன் ஜனவரி-மாா்ச் காலாண்டில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடா்ந்து, டெல் டெக்னாலஜீஸ் 25.9 சதவீத சந்தைப் பங்களிப்புடன் இரண்டாவது இடத்தையும், லெனோவா 20 சதவீத சந்தைப் பங்களிப்புடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன என்று ஐடிசி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐடிசி நிறுவனத்தின் இணை ஆராய்ச்சி மேலாளா் ஜெய்பால் சிங் கூறியதாவது:

பொது முடக்கத்தின் எதிரொலியால், கற்றல் நடவடிக்கைகளுக்கு மாணவா்கள் மற்றும் பெற்றோா்களிடமிருந்தும், வீட்டிலிருந்து பணிபுரிவதற்கு ஐடி பணியாளா்களிடமிருந்தும் கம்ப்யூட்டருக்கான தேவை அதிகரித்துள்ளது. அதேசமயம், சிறு, குறு நிறுவனங்கள் கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு முழுவதும் விற்பனை மந்தமாகவே இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, இதனை எதிா்கொள்ள நிறுவனங்கள் அடுத்த சில காலாண்டுகளில் கிடைக்கும் வளா்ச்சிக்கான சந்தா்ப்பங்களை கைப்பற்ற தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

நிறுவனம் சந்தை பங்களிப்பு (சதவீதத்தில்)

ஹெச்பி 28.2

டெல் 25.9

லெனோவா 20

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com