கரோனா பாதிப்பு எதிரொலி! 1,100 பணியாளர்களை நீக்க ஸ்விகி முடிவு

கரோனா பாதிப்பின் காரணமாக ஸ்விகி நிறுவனம் 1,100 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா பாதிப்பு எதிரொலி! 1,100 பணியாளர்களை நீக்க ஸ்விகி முடிவு


புது தில்லி: கரோனா பாதிப்பின் காரணமாக ஸ்விகி நிறுவனம் 1,100 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கவுள்ளதாக திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த  நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான ஸ்ரீஹர்ஷா மெஜட்டி பணியாளர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூறியுள்ளதாவது: கரோனா வைரஸ் பாதிப்பு நிறுவனத்தின் வர்த்தகத்தை வெகுவாக பாதித்துள்ளது. அதன் காரணமாக, தற்போது நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, நிறுவனம் ஆள்குறைப்பு நடவடிக்கையை கடினமான மனதோடு செயல்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதன்படி, தலைமை அலுவலகம், முக்கிய நகரங்களில் உள்ள நிறுவனத்தின் அலுலகங்களில் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வரும் 1,100 ஊழியர்களை அடுத்து வரும் சில தினங்களில் பணியிலிருந்து விடுவிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com