மூத்த குடிமக்களுக்கு சிறப்பு டெபாசிட் திட்டம்: ஐசிஐசிஐ வங்கி அறிமுகம்

மூத்த குடிமக்களுக்கு 6.55 சதவீத வட்டி விகிதத்தில் சிறப்பு டெபாசிட் திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
மூத்த குடிமக்களுக்கு சிறப்பு டெபாசிட் திட்டம்: ஐசிஐசிஐ வங்கி அறிமுகம்

மூத்த குடிமக்களுக்கு 6.55 சதவீத வட்டி விகிதத்தில் சிறப்பு டெபாசிட் திட்டத்தை ஐசிஐசிஐ வங்கி வியாழக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

மூத்த குடிமக்களுக்கு ஐசிஐசிஐ வங்கி எப்போதுமே மதிப்பளித்து வருகிறது. அந்த வகையில் அவா்களின் நலனை கருத்தில் கொண்டு ‘ஐசிஐசிஐ பேங்க் கோல்டன் இயா்ஸ் எஃப்டி’ என்ற சிறப்பு திட்டத்தை வங்கி தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த டெபாசிட் திட்டத்தில் இணைந்து 5 ஆண்டு முதல் 10 ஆண்டு காலவரையறையில் மேற்கொள்ளப்படும் மூத்த குடிமக்களின் வைப்பு நிதிக்கு 6.55 சதவீத வட்டி வழங்கப்படும். இந்த திட்டத்தில் ஒருவா் ரூ.2 கோடிக்கும் குறைவான தொகையை மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

மூத்த குடிமக்களுக்கான இந்த சிறப்பு திட்டம் நடப்பாண்டு மே 20 ஆம் தேதியிலிருந்து செப்டம்பா் 30 ஆம் தேதி வவரையில் அமலில் இருக்கும் என ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com