கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிகர விற்பனை ரூ.3,121 கோடி

கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிகர விற்பனை 2019-20 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.3,120.67 கோடியாக இருந்தது.
கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிகர விற்பனை ரூ.3,121 கோடி

கோத்ரெஜ் இண்டஸ்ட்ரீஸ் நிகர விற்பனை 2019-20 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ரூ.3,120.67 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.2,934.18 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகமாகும். இக்காலாண்டில் நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.3,089.51 கோடியாக இருந்தது.

ரசாயனப் பிரிவின் மூலமான வருவாய் ரூ.414.86 கோடியிலிருந்து சரிந்து ரூ.390.22 கோடியானது. கால்நடைத் தீவன விற்பனையின் மூலமாக கிடைத்த வருவாய் ரூ.882.05 கோடியிலிருந்து குறைந்து ரூ.881.05 கோடியானது. தாவர எண்ணெய் விற்பனையின் மூலமாக ரூ.147.48 கோடியும், சொத்து மேம்பாட்டு பிரிவிலிருந்து கிடைத்த வருமானம் ரூ.1,436.77 கோடியாகவும் இருந்தது.

நிகர லாபம் ரூ.423.65 கோடியிலிருந்து சரிந்து ரூ.102.08 கோடியானது என கோத்ரெஜ் மும்பை பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com