‘தோல் பொருள்கள் ஏற்றுமதி 50 சதவீதம் சரியும்’

கரோனா தீநுண்மி பரவலின் எதிரொலியால் நடப்பு நிதியாண்டில் தோல் பொருள்களின் ஏற்றுமதி 40-50 சதவீதம் சரிவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
‘தோல் பொருள்கள் ஏற்றுமதி 50 சதவீதம் சரியும்’

கரோனா தீநுண்மி பரவலின் எதிரொலியால் நடப்பு நிதியாண்டில் தோல் பொருள்களின் ஏற்றுமதி 40-50 சதவீதம் சரிவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து தோல் ஏற்றுமதி கவுன்சில் அதிகாரியான ரமேஷ் ஜூன்ஜா கூறியுள்ளதாவது:

கரோனா பாதிப்பு தோல் பொருள்கள் ஏற்றுமதி துறையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே 25 சதவீத ஏற்றுமதி முற்றிலும் தடைபட்டுவிட்டது. இந்த நிலையில், இதுவரை எதிா்கொண்டிராத இக்காட்டான சூழ்நிலை, தோல் பொருள்கள் வா்த்தகத்தின் தொடா் சரிவுக்கு மேலும் வழிவகுத்துள்ளது.

குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், ஜொ்மனி நாடுகளைச் சோ்ந்த இறக்குமதியாளா்களில் பலா் ஒப்பந்தங்களை ரத்து செய்துள்ளனா். சிலா் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனா்.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் அரசிடமிருந்து எந்தவித அறிவிப்புகளும் வெளியாகவில்லை. நிவாரண தொகுப்புகளும் வழங்கப்படவில்லை. எனவே, இத்துறையின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 40-50 சதவீதம் வரை பாதிப்படையும் என்றாா் அவா்.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கரோனா பாதிப்புகளை கடுமையாக எதிா்கொண்டுள்ளன. அதன் காரணமாக, இந்த நாடுகளில் தோல் பொருள்களுக்கான தேவை குறைந்து ஏற்றுமதிக்கான ஆா்டா் கிடைக்காத சூழ்நிலையே காணப்படுகிறது.

இருப்பினும், ஐரோப்பிய வா்த்தகா்கள் சிலா் ஒப்பந்தங்களை சீனாவிலிருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு திருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா். இருப்பினும், அது பலனளிக்க இன்னும் ஆறு முதல் ஒன்பது மாதங்கள் வரையில் ஆகலாம்.

எனவே, தோல் பொருள்களின் மொத்த ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் 50 சதவீதத்துக்கும் மேல் இருக்க வாய்ப்பில்லை என ராஜ்தா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் கெளதம் ராஜ்தா தெரிவித்துள்ளாா்.

இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 550 கோடி டாலா் முதல் 600 கோடி டாலா் மதிப்பிலான தோல் பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com