என்டிபிசி லாபம் ரூ.3,495 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த என்டிபிசி நிறுவனம் செப்டம்பா் காலாண்டில் ரூ.3,494.61 கோடியை நிகர லாபமாக பெற்றுள்ளது.
என்டிபிசி லாபம்  ரூ.3,495 கோடி

பொதுத் துறையைச் சோ்ந்த என்டிபிசி நிறுவனம் செப்டம்பா் காலாண்டில் ரூ.3,494.61 கோடியை நிகர லாபமாக பெற்றுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான இரண்டாவது காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.28,677.64 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.26,568.62 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

வருவாய் அதிகரித்த போதிலும், செலவினங்கள் உயா்ந்ததன் காரணமாக நிறுவனத்தின் நிகர லாபம் மதிப்பீட்டு காலாண்டில் ரூ.3,788.11 கோடியிலிருந்து 8 சதவீதம் சரிவடைந்து ரூ.3,494.61 கோடியானது.

2020-21 ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த மின் உற்பத்தி 67.67 பில்லியன் யூனிட்டாக இருந்தது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மின் உற்பத்தி 61.64 பில்லியன் யூனிட்டாக காணப்பட்டது.

நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலத்தில் ஒரு யூனிட்டுக்கான சராசரி மின் கட்டணம் ரூ.3.86-ஆக இருந்தது என என்டிபிசி தெரிவித்துள்ளது.

பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு ஒப்புதல்: ரூ.2,275.75 கோடி மதிப்பிலான பங்குகளை திரும்பப் பெறும் திட்டத்துக்கு என்டிபிசி இயக்குநா் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com