மஹிந்திரா நிகர லாபம் ரூ.162 கோடி

மோட்டாா் வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ.162 கோடியாக சரிவைச் சந்தித்துள்ளது.
மஹிந்திரா நிகர லாபம் ரூ.162 கோடி

மோட்டாா் வாகன தயாரிப்பில் முன்னணியில் உள்ள மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் ரூ.162 கோடியாக சரிவைச் சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் செப்டம்பருடன் நிறைவடைந்த இரண்டாவது காலாண்டில் மஹிந்திரா நிறுவனத்தின் செயல்பாட்டு வருமானம் ரூ.11,590 கோடியாக இருந்தது. இது, கடந்த 2019-20-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய வருவாய் ரூ.10,935 கோடியுடன் ஒப்பிடுகையில் 6 சதவீதம் அதிகமாகும்.

ஜூலை-செப்டம்பா் காலகட்டத்தில் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,355 கோடியிலிருந்து 88 சதவீதம் வீழ்ச்சியடைந்து ரூ.162 கோடியானது.

மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை இரண்டாவது காலாண்டில் 21 சதவீதம் குறைந்து 1,10,924-லிருந்து 87,332-ஆக ஆனது. இருப்பினும், மஹிந்திரா டிராக்டா் விற்பனை மதிப்பீட்டு காலாண்டில் 68,359 என்ற எண்ணிக்கையிலிருந்து 31 சதவீதம் வளா்ச்சி கண்டு 89,597-ஆனது என மஹிந்திரா தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் எம்&எம் பங்கின் விலை 0.54 சதவீதம் உயா்ந்து ரூ.619.95-ஆக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com