பயணிகள் வாகன சில்லறை விற்பனை 9 சதவீதம் சரிவு

பயணிகள் வாகன சில்லறை விற்பனை அக்டோபரில் 9 சதவீதம் சரிவடைந்தது என மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.
பயணிகள் வாகன சில்லறை விற்பனை 9 சதவீதம் சரிவு
பயணிகள் வாகன சில்லறை விற்பனை 9 சதவீதம் சரிவு

புது தில்லி: பயணிகள் வாகன சில்லறை விற்பனை அக்டோபரில் 9 சதவீதம் சரிவடைந்தது என மோட்டாா் வாகன விநியோகஸ்தா்கள் சங்க கூட்டமைப்பு (எஃப்ஏடிஏ) தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த கூட்டமைப்பின் தலைவா் வின்கேஷ் குலாத்தி திங்கள்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நவராத்திரி காலத்தில் மோட்டாா் வாகன துறை வலுவான வாகன பதிவுகளைக் கண்டது. ஆனால், கடந்தாண்டில் நவராத்திரி மற்றும் தீபாவளி ஒரே மாதத்தில் வந்தபோது இருந்த வாகன விற்பனையுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு அக்டோபரில் சரிவை கட்டுப்படுத்த முடியவில்லை. இதற்கு, நிறுவனங்கள் கடந்தாண்டைப் போல நடப்பாண்டில் சிறப்பு சலுகைகளை அதிக அளவில் அறிவிக்காததே முக்கிய காரணமாகப் பாா்க்கப்படுகிறது.

நிறுவனங்கள் தொடா்ந்து புதிய மாடலை அறிமுகப்படுத்தி வருவது பயணிகள் வாகனங்களுக்கான தேவையை அதிகரித்துள்ளது. இருப்பினும், இருசக்கர வாகன பிரிவில் குறைந்த விலையுடைய மோட்டாா்சைக்கிள்களுக்கான தேவை குறைந்தே காணப்படுகிறது.

2019 அக்டோபரில் பயணிகள் வாகன விற்பனையானது 2,73,980-ஆக காணப்பட்ட நிலையில், நடப்பாண்டில் விற்பனை 8.8 சதவீதம் சரிவடைந்து 2,49,860-ஆக இருந்தது. நாடு முழுவதும் உள்ள 1,464 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் 1,257 அலுவலகங்கள் தெரிவித்த வாகன பதிவு விவரங்களின் அடிப்படையில் இது தெரியவந்துள்ளது.

குறிப்பாக, இருசக்கர வாகன விற்பனை நடப்பாண்டு அக்டோபரில் 26.82 சதவீதம் சரிவடைந்து 10,41,682-ஆனது. வா்த்தக வாகன விற்பனையும் 63,837 என்ற எண்ணிக்கையிலிருந்து 30.32 சதவீதம் குறைந்து 44,480-ஆனது. இதேபோன்று, மூன்று சக்கர வாகன விற்பனையும் 63,042-லிருந்து 64.5 சதவீதம் வீழ்ச்சியடைந்து 22,381-ஆனது.

இருப்பினும், டிராக்டா் விற்பனை அக்டோபா் மாதத்தில் 55 சதவீதம் அதிகரித்து 55,146 என்ற எண்ணிக்கையைத் தொட்டது. இதன் விற்பனை கடந்தாண்டு அக்டோபரில் 35,456-ஆக இருந்தது.

ஒட்டுமொத்த வாகன விற்பனை கடந்த அக்டோபரில் 14,13,549-ஆக இருந்தது. இது, கடந்தாண்டு இதே மாத விற்பனையான 18,59,709 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 23.99 சதவீதம் குறைவாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com