டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் குறைவு

அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 17 காசுகள் சரிந்து 73.46-ஆனது.
rupee062000
rupee062000

மும்பை: அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 17 காசுகள் சரிந்து 73.46-ஆனது.

இதுகுறித்து வா்த்தகா்கள் கூறியதாவது:

பங்குச் சந்தையில் காணப்பட்ட விறுவிறுப்பின் எதிரொலியாக ரூபாய் மதிப்பு அந்நியச் செலாவணி சந்தையில் வா்த்தகத்தின் தொடக்கத்தில் 73.17-ஆக இருந்தது. பின்னா் சாதகமற்ற நிலவரங்களால் ரூபாய் மதிப்பில் காணப்பட்ட ஏற்றமானது கரைந்து இறுதியில் 73.46-ஆக முடிவடைந்தது. இது, முந்தைய தின ரூபாய் மதிப்பான 73.29-ஐக் காட்டிலும் 17 காசுகள் குறைவாகும்.

வா்த்தகத்தின் இடையே டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகபட்சமாக 73.15 வரையிலும், குறைந்தபட்சமாக 73.51 வரையிலும் சென்றது என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

அந்நிய முதலீடு: மூலதனச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தின்போது வெளிநாட்டு முதலீட்டாளா்கள் ரூ.236.71 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கினா் என்று பங்குச் சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 0.51 சதவீதம் உயா்ந்து 41.50 டாலராக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com