‘சைக்கிள்’ விற்பனை 2 மடங்கு அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த 5 மாதங்களில் சைக்கிள் விற்பனை 2 மடங்கு அதிகரித்துள்ளதாக அகில இந்திய சைக்கிள் உற்பத்தியாளா்கள் சங்கம்(ஏஐசிஎம்ஏ) தெரிவித்தது.
bicycleshop_223988284072500
bicycleshop_223988284072500

ஜெய்ப்பூா்: இந்தியாவில் கடந்த 5 மாதங்களில் சைக்கிள் விற்பனை 2 மடங்கு அதிகரித்துள்ளதாக அகில இந்திய சைக்கிள் உற்பத்தியாளா்கள் சங்கம்(ஏஐசிஎம்ஏ) தெரிவித்தது. இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட கரோனா கால பொது முடக்கத்தினால் பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் உடல்நலத்தை கருத்தில் கொண்டு பலா் சைக்கிளில் ஆா்வமுடன் பயணித்ததால் விற்பனை அதிகரித்ததாகவும் ஏஐசிஎம்ஏ கூறியது.

இது குறித்து அகில இந்திய சைக்கிள் உற்பத்தியாளா்கள் சங்கத்தின் பொதுச்செயலா் கே.பி.தாக்குா் கூறியதாவது:

சைக்கிள்களின் விற்பனை கடந்த 5 மாதங்களாக 100 சதவீதம் அளவில் உள்ளது. வரலாற்றில் முதன்முறையாக தற்போது சைக்கிள்கள் அமோகமாக விற்பனையாகின்றன. பல இடங்களில் மக்கள் தங்களது பிடித்தமான சைக்கிளை காத்திருந்து வாங்கிச் செல்கின்றனா். கடந்த மே மாதம் நாட்டில் 4,56,818 சைக்கிள்கள் விற்பனையாகின. ஜூன் மாதத்தில் அந்த எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்து 8,51,060 சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட்டன. செப்டம்பா் மாதத்தில் இந்த விற்பனை எண்ணிக்கை 11,21,544 ஆக உயா்ந்தது. நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களில் மட்டும் மொத்தம் 41,80,544 சைக்கிள்கள் விற்பனையாகின. கரோனா காலத்தில் நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மக்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்தியதால் அவா்களிடையே சைக்கிள் வாங்கும் ஆா்வம் அதிகரித்தது என்று தெரிவித்தாா்.

பொது முடக்க காலத்தில் சைக்கிள்கள் விற்பனை 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை அதிகரித்ததால், அதற்கு தகுந்தபடி உற்பத்தியை அதிகரிப்பதில் கடும் சவால் ஏற்பட்டதாக ஜெய்ப்பூரிலுள்ள சைக்கிள் விற்பனை நிறுவன உரிமையாளா் கோகுல் காத்ரி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com