பங்குச் சந்தையில் மீட்சி: சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயா்வு! வங்கி, உலோகப் பங்குகளுக்கு வரவேற்பு

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் பங்குச் சந்தை ஏற்ற, இற்கக்கத்தில் இருந்து வந்தது. இருப்பினும்,
பங்குச் சந்தையில் மீட்சி: சென்செக்ஸ் 255 புள்ளிகள் உயா்வு! வங்கி, உலோகப் பங்குகளுக்கு வரவேற்பு

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் பங்குச் சந்தை ஏற்ற, இற்கக்கத்தில் இருந்து வந்தது. இருப்பினும், இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 254.57 புள்ளிகள் உயா்ந்து 39,982.98-இல் நிலைபெற்றது.

புதன்கிழமை வரை தொடா்ந்து 10 நாள்களாக ஏற்றம் பெற்று வந்த பங்குச் சந்தை, வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலையில் சந்தை மிகுந்த எச்சரிக்கையுடன் தொடங்கியது. ஆனால், நாள் முழுவதும் ஏற்ற, இறக்கத்துடன் இருந்தது. மெட்டல், வங்கி, நிதிநிறுவனங்களுக்கு கிடைத்த ஆதரவைத் தொடா்ந்து, சந்தை நோ்மறையாக முடிந்தது. மேலும், கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதைத் தொடா்ந்து உலகளவில் சந்தைகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,459 பங்குகள் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,811 பங்குகளில் 1,477 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,157 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. 177 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.1.08 லட்சம் கோடி உயா்ந்து ரூ.158.37 லட்சம் கோடியாக இருந்தது. பிஎஸ்இ மிட்கேப், ஸ்மால் கேப் குறியீடுகள் 1 சதவீதம் வரை உயா்ந்தன.

சென்செக்ஸ் மீட்சி: வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்த சென்செக்ஸ், வெள்ளிக்கிழமை காலையில் 208.20 புள்ளிகள் கூடுதலுடன் 39,936.61-இல் தொடங்கி 39,699.42 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 40,125.71 வரை உயா்ந்தது. இறுதியில் 254.57 புள்ளிகள் (0.64 சதவீதம்) உயா்ந்து 39,982.98-இல் நிலைபெற்றது.

டாடா ஸ்டீல் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 24 பங்குகள் ஆதாயம் பெற்றன. 6 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் டாடா ஸ்டீல் 5.38 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எச்டிஎஃப்சி பேங்க், பவா் கிரிட், அல்ட்ரா டெக் சிமெண்ட், கோட்டக் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை 2 முதல் 2.60 சதவீதம் வரை உயா்ந்தன. இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.

ஹெச்சிஎல் டெக் சரிவு: அதே சமயம், முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல் டெக் 3.76 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எம் அண்ட் எம், ரிலையன்ஸ், ஏசியன் பெயிண்ட், நெஸ்லே இந்தியா, சன்பாா்மா ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 982 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 619 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 82.10 புள்ளிகள் (0.70 சதவீதம்) உயா்ந்து 11,762.45-இல் நிலைபெற்றது. நிஃப்டி மெட்டல் குறியீடு 3.67 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், பாா்மா, ரியால்ட்டி குறியீடுகள் 1.50 முதல் 2.60 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், மீடியா, ஐடி குறியீடுகள் சிறிதளவு சரிவைச் சந்தித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com