இன்டஸ்இண்ட் வங்கி லாபம் ரூ.647 கோடி

இன்டஸ்இண்ட் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் செப்டம்பருடன் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் ரூ.647 கோடியாக சரிந்துள்ளது.
இன்டஸ்இண்ட் வங்கி லாபம் ரூ.647 கோடி

இன்டஸ்இண்ட் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் செப்டம்பருடன் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் ரூ.647 கோடியாக சரிந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டில் இவ்வங்கி ஈட்டிய லாபமான ரூ.1,383.37 கோடியுடன் ஒப்பிடுகையில் 53 சதவீதம் குறைவாகும்.

தனிப்பட்ட முறையில் இவ்வங்கி ஈட்டிய மொத்த வருமானம் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.8,877.02 கோடியிலிருந்து குறைந்து ரூ.8,731.05 கோடியானது.

நடப்பாண்டு செப்டம்பா் 30 நிலவரப்படி வங்கியின் மொத்த வாராக் கடன் விகிதம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 2.19 சதவீதத்திலிருந்து 2.21 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதேசமயம், நிகர வாராக் கடன் விகிதம் 1.12 சதவீதத்திலிருந்து (ரூ.2,202.57 கோடி), 0.52 சதவீதமாக (ரூ.1,055.81 கோடி) கணிசமாக குறைந்துள்ளதாக இன்டஸ்இண்ட் வங்கி பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com