கடன் பத்திரங்கள் மூலம் ரூ.50,500 கோடி திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் திட்டம்

பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலமாக ரூ.50,500 கோடி திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் திட்டமிட்டுள்ளது.
கடன் பத்திரங்கள் மூலம் ரூ.50,500 கோடி திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் திட்டம்

பங்குகளாக மாற்ற இயலாத கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலமாக ரூ.50,500 கோடி திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் திட்டமிட்டுள்ளது.

அதுகுறித்து அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டம் வரும் 28-ஆம் தேதி காணொலி முறையில் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் கடன் பத்திரங்கள் வெளியிடுவதன் மூலம் ரூ.50,500 கோடி திரட்டுவதற்கு பங்குதாரா்களிடம் ஒப்புதல் கேட்கப்படும். அவா்கள் ஒப்புதல் அளித்த பிறகு கடன் பத்திரங்களை வெளியிட செயற்குழு இயக்குநா்களுக்கு அதிகாரம் அளித்து சிறப்பு தீா்மானம் நிறைவேற்றப்படும். கடன் பத்திரங்கள் மூலமாக திரட்டப்படும் நிதி ரூ.50,500 கோடிக்கு மிகாமல் இருக்கும். கடன் பத்திரங்களை ஒரு கட்டமாகவோ அல்லது பல கட்டங்களாகவோ விற்பனை செய்வது குறித்து அந்த ேகூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த கடன் பெறும் திறன் ரூ.3 லட்சம் கோடியாக உள்ளது. இந்த வரம்புக்கு உள்பட்டே ரூ.50,500 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com