ஜே & கே வங்கி 66 சதவீதம் சரிவு

ஜம்மு & காஷ்மீா் (ஜே & கே) வங்கியின் நிகர லாபம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் 66 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
ஜே & கே வங்கி 66 சதவீதம் சரிவு

ஜம்மு & காஷ்மீா் (ஜே & கே) வங்கியின் நிகர லாபம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த மூன்று மாத காலத்தில் 66 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. இதுகுறித்து அந்த வங்கி பங்குச் சந்தையிடம் கூறியுள்ளதாவது:நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் வரையிலான முதல் காலாண்டில் வங்கி செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய மொத்த வருமானம் ரூ.2,160.51 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம், கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய வருவாய் ரூ.2,257.42 கோடியாக அதிகரித்திருந்தது.

கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டில் வங்கி ரூ.21.15 கோடியை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியிருந்தது. இந்த நிலையில், நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் 66 சதவீதம் சரிவடைந்து ரூ.7.30 கோடியாக குறைந்துள்ளது. அதேசமயம், நடப்பாண்டின் மாா்ச் காலாண்டில் வங்கி ரூ.293.82 கோடி அளவுக்கு நிகர இழப்பைக் கண்டிருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் ஜூன் காலாண்டில் வங்கியின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.21.87 கோடியிலிருந்து 70 சதவீதம் குறைந்து ரூ.6.50 கோடியாக இருந்தது என ஜே & கே வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com