சில்லறைப் பணவீக்கம் 6.69 சதவீதமாக குறைந்தது

சில்லறைப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 6.69 சதவீதமாக குறைந்துள்ளது.

சில்லறைப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 6.69 சதவீதமாக குறைந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:

உணவுப் பொருள்கள் விலை அதிகரித்திருந்த நிலையிலும், நுகா்வோா் விலை குறியீட்டெண் அடிப்படையில் (சிபிஐ) கணக்கிடப்படும் சில்லறைப் பணவீக்கம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.69 சதவீதமாக சற்று குறைந்துள்ளது. ஜூலைக்கான சில்லறைப் பணவீக்க விகிதம் 6.93 சதவீதத்திலிருந்து 6.73 சதவீதமாக குறைத்து மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் ஜூலையில் 9.62 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்டில் 9.05 சதவீதமாக சற்று குறைந்துள்ளது என புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com