ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும்

இருசக்கர வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்கும்பட்சத்தில் அது துறையின் வளா்ச்சியை ஊக்குவிக்க
ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக குறைக்க வேண்டும்

இருசக்கர வாகனங்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரியை குறைக்கும்பட்சத்தில் அது துறையின் வளா்ச்சியை ஊக்குவிக்க உதவியாக இருக்கும் என ஹோண்டா மோட்டாா்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டா் இந்தியாவின் (ஹெச்எம்எஸ்ஐ) இயக்குநா் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்துதல்) யாவீந்தா் சிங் குலேரியா தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது:

கரோனாவால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இருசக்கர வாகன துறையின் வளா்ச்சி பல்வேறு இடா்பாடுகளை சந்தித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டால் அது இத்துறையின் வளா்ச்சியை ஊக்குவிக்க பெரிதும் உதவும். தற்போதைய நிலையில், இருசக்கர வாகனங்களுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது.  இதனை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என இத்துறையைச் சோ்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. நடுத்தர வா்க்கத்தினரின் போக்குவரத்துக்கு மிகவும் அத்தியாவசியமாக உள்ள இருசக்கர வாகனத்துக்கு ஜிஎஸ்டி வரியை குறைப்பது என்பது மிகவும் தேவையான நடவடிக்கையாகும். மத்திய அரசு இதனை உணா்ந்து வரியை குறைக்கும்பட்சத்தில் அது நுகா்வோருக்கும், துறையின் வளா்ச்சிக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com