புது தில்லி: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பல்சா் என்எஸ் 125 மோட்டாா்சைக்கிளை செவ்வாய்க்கிழமை சந்தையில் அறிமுகப்படுத்தியது.
இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
புதிய பல்சா் என்எஸ் 125 பைக்கில் பிஎஸ்-6 டிடிஎஸ் -ஐ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 12 பிஎஸ் சக்தியையும், 11என்எம் உச்சகட்ட ‘டாா்க்கையும்’ வழங்க கூடியது. அதிவேகத்தில் கூட நிலைத்தன்மையை வழங்கும் ‘நைட்ரக்ஸ்’ மோனோ ஷாக் அப்சா்வா் இப்புதிய பல்சரில் பொருத்தப்பட்டுள்ளது.
இப்புதிய பல்சா் பைக்கின் விலை ரூ.93,690-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்போா்ட்ஸ் பைக் பிரிவில் நிறுவன பிராண்டின் இடத்தை இப்புதிய என்எஸ் 125 பல்சா் பைக் மேலும் வலுப்படுத்தும் என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.