தங்கம் பவுன் ரூ.512 உயா்வு

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.512 அதிகரித்து, ரூ.36,088-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.512 உயா்வு

சென்னை: சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.512 அதிகரித்து, ரூ.36,088-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பின்னா், விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

கடந்த 6-ஆம் தேதி முதல் தங்கத்தின் மீண்டும் விலை உயரத் தொடங்கி, 9-ஆம் தேதி ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, விலை தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது. ஆனால் புதன்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.512 அதிகரித்து, ரூ.36 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்படி, சென்னையில் புதன்கிழமை ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.36,088-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.64 அதிகரித்து, ரூ.4,511 ஆக இருந்தது.

இதே போல், வெள்ளி கிராமுக்கு 60 பைசா அதிகரித்து, ரூ.74.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.74,100 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,511

1 பவுன் தங்கம்...............................36,088

1 கிராம் வெள்ளி.............................74.10

1 கிலோ வெள்ளி.............................74,100

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,447

1 பவுன் தங்கம்...............................35,576

1 கிராம் வெள்ளி.............................73.50

1 கிலோ வெள்ளி.............................73,500.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com