அமேசான் நிறுவனத்திற்கு ரூ.10,000 கோடி அபராதம்

இத்தாலியில் அமேசான் நிறுவனத்தின் மேல் எழுந்த குற்றச்சாட்டிற்காக இந்திய மதிப்பில் ரூ. 10,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
அமேசான் நிறுவனத்திற்கு ரூ.10,000 கோடி அபராதம்
அமேசான் நிறுவனத்திற்கு ரூ.10,000 கோடி அபராதம்

இத்தாலியில் அமேசான் நிறுவனத்தின் மேல் எழுந்த குற்றச்சாட்டிற்காக இந்திய மதிப்பில் ரூ. 10,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

உலகில் முன்னணி நிறுவனமான அமேசான் இத்தாலியில் தன்னுடைய மூன்றாம் தர விற்பனையாளர்களுக்கு சில சேவைகளை வழங்கி அமேசானுக்கு எதிரான போட்டி நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தியதற்காக புதிய சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

அதாவது, அமேசான் ஆன்லைனில் பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்கும்போது, குறிப்பிட்ட சில நிறுவனங்களின் பொருட்கள் மட்டும் அதிகமுறை காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் அனைத்தும் அமேசானின் போட்டி நிறுவனங்களை வீழ்த்தக்கூடியது என்பதால் தன் செல்வாக்கை தவறான வழியில் பயன்படுத்தி பல நிறுவனங்களுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தி விட்டதாக தொடர்புடைய நிறுவனங்கள் புகார் அளித்தனர்.

இதனை விசாரித்த நிறுவனங்களைக் கண்காணிக்கும் அமைப்பு அமேசான் நிறுவனத்திற்கு 1.3 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் ரூ.10,000 கோடி) அபராதமாக விதித்தது.

இருப்பினும்,  இதனை எதிர்த்து அமேசான் சட்டப்படி மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது.

மேலும், இவ்வளவு பெரிய அபராதத்தைப் பெற்ற ஒரே நிறுவனம் அமேசான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com