மோட்டோ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ’ 'மோட்டோ ஜி51 5ஜி’ ஸ்மார்ட்போனை இன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
’5ஜி’ தொழில்நுட்பம் என்பதால் பல சிறப்பு அம்சங்களை மேம்படுத்தி இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | அமேசான் நிறுவனத்திற்கு ரூ.10,000 கோடி அபராதம்
’மோட்டோ ஜி51 5ஜி' சிறப்பம்சங்கள் :
* 6.8 இன்ச் அளவுகொண்ட ஃபுல் எச்டி திரை
* ஸ்னாப்டிராகன் 480
* உள்ளக நினைவகம்(ரேம்) 4 ஜிபி , கூடுதல் நினைவகம் 64 ஜிபி
*பின்பக்கம் 50எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 5 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 13 எம்பி அளவை கொண்டிருக்கிறது.
*5000 எம்ஏஎச் பேட்டரி வசதி
*ஆன்டிராய்டு 11 ஒஎஸ்
* டைப்-சி போர்ட்
ஸ்மார்ட்போனின் ஆரம்ப விற்பனை விலை ரூ.15,000 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. டிச.16 ஆம் தேதி முதல் அமேசான் , பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வருகிறது.