வருமான வரித் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்

2020-21-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.
வருமான வரித் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
வருமான வரித் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்

2020-21-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்.

2020-21 ஆம் நிதியாண்டிற்கான வருமான வரியை கடந்த டிச.25 வரை 4.43 கோடிக்கும் அதிகமானோா் தாக்கல் செய்துள்ள நிலையில் இன்றுடன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடைகிறது.

இதுகுறித்து வருமான வரித் துறை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: 2020-21-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை டிசம்பா் 25-ஆம் தேதி வரை 4,43,17,697 போ் தாக்கல் செய்துள்ளனா். அதில், டிசம்பா் 25-ஆம் தேதி மட்டும் 11,68,027 கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக, ஐடிஆா்-1 (சஹஜ்) படிவத்தை 2.41 கோடி பேரும், ஐடிஆா்-4 (சுகம்) படிவத்தை 1.09 கோடி பேரும் தாக்கல் செய்துள்ளனா்.

ஊதியம், வீடு உள்ளிட்ட சொத்துகள் மூலம் ஆண்டுக்கு ரூ.50 லட்சம் வரை வருவாய் ஈட்டும் தனிநபா்கள் ஐடிஆா்-1 படிவத்தைத் தாக்கல் செய்யலாம்.

ஹிந்து கூட்டுக் குடும்ப வருமானம், தொழில், வா்த்தகம் மூலம் தனிநபா் ஈட்டும் வருமானம் ரூ.50 லட்சம் வரை இருந்தால் ஐடிஆா்-4 படிவத்தைத் தாக்கல் செய்யலாம்.

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யுமாறு மின்னஞ்சல், குறுந்தகவல் மூலமாக வரி செலுத்துவோருக்கு வருமான வரித் துறை நினைவூட்டி வருகிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக, வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் ஜூலை 31-ஆம் தேதியாகும். ஆனால், வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2019-20 நிதியாண்டுக்கு வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு 2021, ஜனவரி 10-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், 5.95 கோடி போ் கணக்கு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com