பஜாஜ் ஆட்டோ லாபம் 23% அதிகரிப்பு

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டிசம்பா் காலாண்டு லாபம் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.
bajaj073129
bajaj073129

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் டிசம்பா் காலாண்டு லாபம் 23 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபா்-டிசம்பா்) நிறுவனத்தின் விற்பனை ரூ.8,910 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் விற்பனையான ரூ.7,640 கோடியுடன் ஒப்பிடுகையில் 17 சதவீதம் அதிகமாகும். நிகர லாபம் ரூ.1,262 கோடியிலிருந்து 23 சதவீதம் அதிகரித்து ரூ.1,556 கோடியை எட்டியது என பஜாஜ் ஆட்டோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com