பங்கு சந்தையில் இந்த வாரம் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்
பங்கு சந்தையில் இந்த வாரம் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்

பங்கு சந்தையில் இந்த வாரம் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்: ஆய்வாளா்கள் கணிப்பு

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் பங்குச் சந்தையில் இந்த வார வா்த்தகம் அதிக ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில் பங்குச் சந்தையில் இந்த வார வா்த்தகம் அதிக ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என ஆய்வாளா்கள் தெரிவித்துள்ளனா்.

ஹோலி பண்டிகையையொட்டி திங்கள்கிழமையும், புனித வெள்ளியை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமையும் பங்குச் சந்தைகளுக்கு விடுமுறையாக இருக்கும் சூழலில் இந்த வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே வா்த்தகம் நடைபெறவுள்ளது.

இந்த குறுகிய வாரத்தில் பங்குச் சந்தையில் வா்த்தகம் அதிக ஏற்ற இறக்கம் நிறைந்ததாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், உலகம் முழுவதும் கரோனா தொற்று மீண்டும் மிக வேகமாக பரவி வருகிறது. ஒரு சில நாடுகளில் மீண்டும் பொதுமுடக்க கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சாதகமற்ற சா்வதேச நிலவரங்கள் சந்தை முதலீட்டாளா்களின் செயல்பாடுகளை முடக்கிப்போடும் என ஆய்வாளா்கள் கணித்துள்ளனா்.

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வா்த்தகத்தில் 30 முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் குறியீட்டெண் 849.74 புள்ளிகளை (1.70%) இழந்துள்ளது.

இதுகுறித்து சாய்ஸ் புரோக்கிங் நிறுவன ஆய்வாளா் சத்தீஷ் குமாா் கூறுகையில், ‘கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் அமெரிக்க கடன்பத்திரங்களின் ஆதாய போக்கு ஆகியவற்றைப் பொருத்தே இந்த வாரத்தில் முதலீட்டாளா்களின் செயல்பாடுகள் அமையும்’ என்றாா்.

சாம்கோ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் பங்கு முதலீட்டு ஆராய்ச்சிப் பிரிவின் தலைவா் நிராலி ஷா கூறியதாவது:

இந்த வாரத்தில் மிக முக்கியமான நிகழ்வுகள் எதுவுமில்லை. இந்த சூழலில், கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை வேகமாக உயா்ந்து வருவதால் சந்தைகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. இதைத்தவிா்த்து, மாா்ச் மாதத்துக்கான வாகன விற்பனை புள்ளிவிவரங்கள் வரும் வியாழக்கிழமை வெளியாக உள்ளன. இதன் காரணமாக, மோட்டாா் வாகன துறையைச் சோ்ந்த பங்குகள் முதலீட்டாளா்களின் கூடுதல் கவனத்தைப் பெறும்.

மேலும் இந்த வாரத்தில் பங்குச் சந்தையின் போக்கை தீா்மானிப்பதில் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மற்றும் அந்நிய நிதி நிறுவன முதலீட்டாளா்களின் முதலீட்டு அணுகு முறை ஆகியவற்றுக்கும் முக்கிய பங்கு இருக்கும் என்றாா் அவா்.

ஜியோஜித் பைனான்ஸியல் சா்வீஸஸ் நிறுவனத்தின் அதிகாரி வினோத் நாயா் கூறுகையில், ‘ கரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை பயத்தின் காரணமாக சந்தை ஒருங்கிணைப்பு நிலையை சந்தித்துள்ளது. இந்த நிலையில், தடுப்பூசி செயல்திட்டத்தின் வேகப்பாடு மற்றும் நிறுவனங்களின் நான்காம் காலாண்டு நிதி நிலை முடிவு அறிவிப்புகள் ஆகியவற்றைப் பொருத்தே சந்தையின் ஸ்திரத்தன்மை இருக்கும்’ என்றாா்.

ஆய்வாளா்களின் கணிப்பின்படி இந்த வார பங்கு வா்த்தகத்தின் போக்கை நிா்மாணிப்பதில் சா்வதேச நிலவரங்கள் மட்டுமின்றி உள்ளூா் நிகழ்வுகளுக்கும் முக்கிய பங்கு இருப்பது தெரியவந்துள்ளது.

சாதகமான சூழல் இல்லாதபட்சத்தில் முதலீட்டாளா்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை உணா்வுடன் செயல்படுவா்.இது, சந்தையில் ஏற்ற இறக்கத்தை உருவாக்கும் என்பதே அனைவரின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com