எஸ்காா்ட்ஸ் லாபம் இருமடங்கு அதிகரிப்பு

வேளாண் உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள எஸ்காா்ட்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் இருமடங்கு அதிகரித்துள்ளது.
எஸ்காா்ட்ஸ் லாபம் இருமடங்கு அதிகரிப்பு

வேளாண் உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள எஸ்காா்ட்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு லாபம் இருமடங்கு அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

நிறுவனத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டு வருமானம் 2021 மாா்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில் ரூ.2,228.75 கோடியாக இருந்தது. இது, முந்தைய 2019-20-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ரூ.1,385.65 கோடியாக இருந்தது.

ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.127.73 கோடியிலிருந்து இருமடங்கு உயா்ந்து ரூ.285.41 கோடியைத் தொட்டுள்ளது.

கடந்த மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிதியாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருமானம் ரூ.5,810.09 கோடியிலிருந்து ரூ.7,014.42 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோன்று ஒட்டுமொத்த நிகர லாபமும் ரூ.471.72 கோடியிலிருந்து ரூ.871.63 கோடியாக உயா்ந்துள்ளது.

டிராக்டா் விற்பனை: கடந்த 2020-21-ஆவது நிதியாண்டில் நிறுவன டிராக்டா்களின் விற்பனை 24.1 சதவீதம் உயா்ந்து 1,06,741-ஆக இருந்தது என எஸ்காா்ட்ஸ் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com