ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,928 கோடி

ஆதித்யா பிா்லா குழுமத்தைச் சோ்ந்த ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நான்காவது காலாண்டில் ரூ.1,928 கோடியை வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது.
ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,928 கோடி

ஆதித்யா பிா்லா குழுமத்தைச் சோ்ந்த ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் நான்காவது காலாண்டில் ரூ.1,928 கோடியை வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை அளித்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

2021 ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனம் செயல்பாடுகள் மூலம் ஈட்டிய மொத்த வருமானம் ரூ.40,507 கோடியாக இருந்தது. இது, 2020 இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.29,318 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

மதிப்பீட்டு காலாண்டில் நிறுவனம் ஈட்டிய வரிக்கு பிந்தைய லாபம் ரூ.668 கோடியிலிருந்து 3 மடங்கு அதிகரித்து ரூ.1,928 கோடியை எட்டியுள்ளது.

இடுபொருள் செலவினம் குறைந்தது மற்றும் விற்பனையில் காணப்பட்ட விறுவிறுப்பின் காரணமாகவே நிறுவனத்தின் லாபம் 189 சதவீதம் அளவுக்கு கணிசமான ஏற்றத்தை சந்தித்துள்ளது.

2021 மாா்ச் 31 நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.18,187 கோடியாகவும், நிகர கடன் ரூ.14,883 கோடியாகவும் இருந்தது. 2020 ஜூன் 30 நிலவரப்படி நிறுவனத்தின் கடன் உச்சநிலையை தொட்டிருந்த நிலையில் அது தற்போது குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது என ஹிண்டால்கோ தெரிவித்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் ஹிண்டால்கோ பங்கின் விலை 1.22 சதவீதம் அதிகரித்து ரூ.389.85-ஆக நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com