லாவாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ‘அக்னி 5ஜி’ அறிமுகம்

லாவா நிறுவனம் தன்னுடைய முதல் 5ஜி ஸ்மார்ட்போனான ‘அக்னி 5ஜி’-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
லாவாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ‘அக்னி 5ஜி’ அறிமுகம்
லாவாவின் முதல் 5ஜி ஸ்மார்ட்போன் ‘அக்னி 5ஜி’ அறிமுகம்

லாவா நிறுவனம் தன்னுடைய முதல் 5ஜி ஸ்மார்ட்போனான ‘அக்னி 5ஜி’-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.

’5ஜி ’ தொழிநுட்ப வரிசையில் இணைந்திருக்கும் லாவா நிறுவனம் தனக்கென தனி வாடிக்கையாளர்களைக் கொண்டிருப்பதால் சில முக்கிய அம்சங்களுடன் ‘அக்னி 5ஜி’ஸ்மார்ட்போனை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் பிராசசர் உடன் வெளியாகியிருப்பதால் வாடிக்கையாளர்களை ஈர்த்திருக்கிறது.

’விவோ ஒய் 50டி ஸ்மார்ட்போன்' சிறப்பம்சங்கள் :

* 6.78 இன்ச் அளவுகொண்ட  எச்டி திரை 

* மீடியா டெக் டைம்சிட்டி 810

*உள்ளக நினைவகம்  8 ஜிபி , கூடுதல் நினைவகம் 128 ஜிபி 

*பின்பக்கம் 64எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 5 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.

*5000 எம்ஏஎச்  பேட்டரி வசதி 

*ஆன்டிராய்டு 11 ஒஎஸ் 

* டைப்-சி போர்ட் 

* நீல நிறம்

இதன் ஆரம்ப விற்பனை விலையாக ரூ.19,0000 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.லாவா கடைகளிலும்  , அமேசான் , பிளிப்கார்ட் இணையதளத்திலும் இதைப் பெற்றுக் கொள்ளலாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com