ஒன் பிளஸ் நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் நார்ட் 2 பாக் மேன் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருக்கிறது.
’5ஜி ’ தொழிநுட்பத் தரத்தில் வெளியான ஒன்பிளஸ் நார்ட் 2-வின் அம்சங்களை மேம்படுத்தி இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | 4ஜி பதிவிறக்க வேகம்: ஜியோ முதலிடம்
’ஒன்பிளஸ் நார்ட் 2 பாக்மேன்' சிறப்பம்சங்கள் :
* 6.43 இன்ச் அளவுகொண்ட எச்டி திரை
* மீடியா டெக் டைம்சிட்டி 1200
*மூன்று தர நினைவகம்: உள்ளக நினைவகம் 12 ஜிபி , கூடுதல் நினைவகம் 256 ஜிபி(ரூ.37,999) , 8ஜிபி + 128ஜிபி திறன் (ரூ.27,999) 6ஜிபி+64ஜிபி(ரூ.24,999)
*பின்பக்கம் 50எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 5 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 32 எம்பி அளவை கொண்டிருக்கிறது.
*4500 எம்ஏஎச் பேட்டரி வசதி
*ஆன்டிராய்டு 11 ஒஎஸ்
* டைப்-சி போர்ட்
* நீல நிறம்
இதன் ஆரம்ப விற்பனை விலையாக ரூ.24,999-லிருந்து 37,999 வரை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.ஒன்பிளஸ் கடைகளிலும் , அமேசான் , பிளிப்கார்ட் இணையதளத்திலும் இதைப் பெற்றுக் கொள்ளலாம்