’ரெட்மி நோட் 11டி 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஸியோமி நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான ’ரெட்மி நோட் 11டி 5ஜி’ ஸ்மார்ட்போனை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறது.
’ரெட்மி 11’ தொடர் என்பதால் பல சிறப்பு அம்சங்களை மேம்படுத்தி இந்த தயாரிப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | ’ஒமைக்ரான்’ கவலைகளுக்கிடையே சென்செக்ஸ் 153 புள்ளிகள் உயா்வு!
’ரெட்மி நோட் 11டி 5ஜி' சிறப்பம்சங்கள் :
* 6.60 இன்ச் அளவுகொண்ட எச்டி திரை
* மீடியா டெக் டைமன்சிட்டி 810
*மூன்று ரேம் வசதியுடன் வெளியாகிறது . உள்ளக நினைவகம் 4, 6, 8 ஜிபி , கூடுதல் நினைவகம் 64, 128 ஜிபி
*பின்பக்கம் 50எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 5 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.
*5000 எம்ஏஎச் பேட்டரி வசதி
*ஆன்டிராய்டு 11 ஒஎஸ்
* டைப்-சி போர்ட்
* நீல நிறம்
ஸ்மார்ட்போனின் ஆரம்ப விற்பனை விலை ரூ.14,999 (6ஜிபி ரேம்) ரூ.15,999 (6 ஜிபி) ரூ.17,999(8ஜிபி) என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. வருகிற டிச.7 அன்று தொடங்கும் விற்பனையில் ஸியோமி கடைகளிலும் , அமேசான் , பிளிப்கார்ட் இணையதளத்திலும் இதைப் பெற்றுக் கொள்ளலாம்