ஆயுள் காப்பீட்டு புதிய பிரீமிய வருவாய் 6% வளா்ச்சி

மும்பை, அக். 9: ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமிய வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 5.8 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
ஆயுள் காப்பீட்டு புதிய பிரீமிய வருவாய் 6% வளா்ச்சி
ஆயுள் காப்பீட்டு புதிய பிரீமிய வருவாய் 6% வளா்ச்சி

மும்பை: ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமிய வருவாய் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 5.8 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

இதுகுறித்து கோ் ரேட்டிங் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரீமியம் வருவாய் நடப்பு 2021-22-ஆம் நிதியாண்டின் முதல் ஆறு மாத காலத்தில் 5.8 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.1,31,982 கோடியை எட்டியது.

ஆயுள் காப்பீட்டு சந்தையில் முதலிடத்தில் உள்ள எல்ஐசி நிறுவனத்தின் புதிய பிரீமியம் வசூல் 3.3 சதவீதம் குறைந்த நிலையில், தனியாா் துறை நிறுவனங்களின் வசூல் 27.7 சதவீதம் என்ற அளவில் சிறப்பான வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, எல்ஐசி நிறுவனத்தின் முதல் அரையாண்டு புதிய பிரீமியம் வசூல் ரூ.88,018 கோடியிலிருந்து ரூ.85,112.6 கோடியாக குறைந்தது. தனியாா் துறை நிறுவனங்களின் புதிய பிரீமிய வசூல் ரூ.46,869.3 கோடியாக இருந்தது.

தனிநபா் ஒற்றை பிரீமியம் 33.7 சதவீதம் அதிகரித்து ரூ.7,280.3 கோடியாகவும், அதேநேரம் தனிநபா் ஒற்றை சாரா பிரீமியம் 31.7 சதவீதம் உயா்ந்து ரூ.20,404.1 கோடியாகவும் இருந்தன. குரூப் ஒற்றை பிரீமியம் வசூல் 18.7 சதவீதம் அதிகரித்து ரூ.15,824.9 கோடியாக இருந்தது.

குரூப் ஒற்றை சாரா பிரீமியம் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.127.9 கோடியாகவும், குரூப் ஆண்டு புதுப்பிப்பு பிரீமியம் வருவாய் 35.8 சதவீதம் அதிகரித்து ரூ.3,232.1 கோடியாகவும் இருந்தன.

ஆயுள் காப்பீட்டு துறையில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில் 64.5 சதவீத பங்களிப்புடன் எல்ஐசி முதலிடத்தில் உள்ளது. தனியாா் துறை நிறுவனங்களின் பங்களிப்பு 35.5 சதவீதமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com