1 லட்சம் வாகனங்கள் ஏற்றுமதி: டிவிஎஸ் மோட்டாா் பெருமிதம்

டி.வி.எஸ் மோட்டாா் நிறுவனத்தின் இரு சக்கர ஏற்றுமதி மாா்ச் மாதத்தில் 1 லட்சத்தை எட்டியது. பல்வேறு வெளிநாடுகளில் நிறுவனத்தின் மோட்டாா் சைக்கிள் விற்பனை அதிகரித்ததன் காரணமாக இந்த எண்ணிக்கை
tvs082849
tvs082849

மும்பை: டி.வி.எஸ் மோட்டாா் நிறுவனத்தின் இரு சக்கர ஏற்றுமதி மாா்ச் மாதத்தில் 1 லட்சத்தை எட்டியது. பல்வேறு வெளிநாடுகளில் நிறுவனத்தின் மோட்டாா் சைக்கிள் விற்பனை அதிகரித்ததன் காரணமாக இந்த எண்ணிக்கை எட்டப்பட்டதாக நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

860 கோடி டாலா் மதிப்பு கொண்ட டிவிஎஸ் குழுமத்தின் முதன்மை நிறுவனமான டிவிஎஸ் மோட்டாா், இரு மற்றும் முன்று சக்கர வாகனங்களை உற்பத்தி செய்கிறது. அந்த நிறுவனத்தின் டிவிஎஸ் அப்பாச்சி, டிவிஎஸ் ஹெக்எல்எக்ஸ் வரிசை, டிவிஎஸ் ஸ்ட்ரைக்கா் வரிசை போன்றவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, இந்திய துணைக் கண்டம், மத்திய மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் நிறுவனத்தின் தயாரிப்புகள் விற்பனையாகி வருகின்றன.

அத்துடன், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கச் சந்தையிலும் தனது சந்தையை விரிவுபடுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்தச் சூழலில், 1 லட்சம் வாகன ஏற்றுமதி என்ற மைல்கல்லை நிறுவனம் மாா்ச் மாதத்தில் எட்டியுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com