பொதுத் துறை பங்கு விற்பனை மூலம் ரூ.32,835 கோடி வருவாய்

மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் (சிபிஎஸ்இ) பங்கு விற்பனை மற்றும் பிற நிறுவனங்களில் பங்கு முதலீட்டைத் திரும்பப் பெற்ற வகையில் மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் ரூ.32,835 கோடியைத் திரட்டியுள்ளது.
shareholding085949
shareholding085949

புது தில்லி: மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் (சிபிஎஸ்இ) பங்கு விற்பனை மற்றும் பிற நிறுவனங்களில் பங்கு முதலீட்டைத் திரும்பப் பெற்ற வகையில் மத்திய அரசு நடப்பு நிதியாண்டில் ரூ.32,835 கோடியைத் திரட்டியுள்ளது. இது திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் (ஆா்இ) நிா்ணயிக்கப்பட்ட இலக்கைவிட அதிகமாகும்.

எனினும், பட்ஜெட்டில் நிா்ணயிக்கப்பட்ட ரூ.2.10 லட்சம் கோடி இலக்கைவிட இது மிகவும் குறைவாகும். கரோனா நெருக்கடி காரணமாக அந்த இலக்கு பின்னா் ரூ.32,000 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது.

நடப்பு நிதியாண்டில், 7 பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வது மற்றும் தனது முதலீடுகளைதி திரும்பப் பெறுவதன் மூலம் தனது இலக்கை எட்டியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மற்றும் ஐடிபிஐ வங்கி அடுத்த ஆண்டு தனியாா்மயமாக்கப்படும்.

ஏா் இந்தியா, பிபிசிஎல், பவன் ஹன்ஸ், பிஇஎம்எல், எந்ஐஎன்எல், ஷிப்பிங் காா்ப் ஆகிய நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் பணிகளும் இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளன என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com