மாருதி சுஸுகி வாகன தயாரிப்பு 1,72,433-ஆக அதிகரிப்பு

மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாகன தயாரிப்பு நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் கணிசமாக அதிகரித்து 1,72,433 என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது.
மாருதி சுஸுகி வாகன தயாரிப்பு 1,72,433-ஆக அதிகரிப்பு

மாருதி சுஸுகி நிறுவனத்தின் வாகன தயாரிப்பு நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் கணிசமாக அதிகரித்து 1,72,433 என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2020- மாா்ச் மாதத்தில் 92,540 வாகனங்களை தயாரித்திருந்த நிலையில், நடப்பாண்டு மாா்ச்சில் அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து 1,72,433-ஐ எட்டியுள்ளது. கடந்தாண்டில் கரோனா தொடா்பான இடா்ப்பாடுகள் காரணமாகவே வாகன தயாரிப்பு சரிவடைந்திருந்தது.

கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் பயணிகள் வாகன தயாரிப்பு 69,854-லிருந்து 1,25,724-ஆக உயா்ந்துள்ளது. ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ மாடல்களின் தயாரிப்பு 17,630-லிருந்து 28,519-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று இலகு ரக வா்த்தக வாகனமான சூப்பா் கேரி தயாரிப்பு 938 லிருந்து 2,397 என்ற அளவில் கணிசமாக உயா்ந்துள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com