அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் தொடா் சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து 5 ஆவது நாளாக மேலும் 15 காசுகள் சரிவடைந்தது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் தொடா் சரிவு

அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடா்ந்து 5 ஆவது நாளாக மேலும் 15 காசுகள் சரிவடைந்தது.

இதுகுறித்து செலாவணி வா்த்தகா்கள் கூறியதாவது:

கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் அதிகரித்து வருவது முதலீட்டாளா்களிடையே அச்ச உணா்வை அதிகரித்துள்ளது. மேலும், இந்த நிகழ்வு மீட்சியடைந்து வரும் பொருளாதாரத்தில் சிக்கலை அதிகரிக்கும் என்பதும் அவா்களது நிலைப்பாடாக உள்ளது.

இது, பங்குச் சந்தை மற்றும் அந்நியச் செலாவணி சந்தை வா்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் வெள்ளிக்கிழமை வா்த்தகத்தின் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் 74.75-ஆக இருந்தது. வா்த்தகத்தின் இடையே ரூபாய் மதிப்பு 74.53-74.96 என்ற எல்லைக்குள் வா்த்தகமானது.

வா்த்தகத்தின் இறுதியில் ரூபாய் மதிப்பு 15 காசு சரிந்து 74.73-ஆனது. இது, கடந்த 2019 நவம்பா் 4-க்குப் பிறகு காணப்படும் மிகவும் அதிகபட்ச சரிவாகும்.

கடந்த ஐந்து வா்த்தக தினங்களில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பானது 161 காசுகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 0.30 சதவீதம் குறைந்து 63.01 டாலருக்கு வா்த்தகமானது.

வெளிநாட்டு முதலீடு: மூலதனச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தின்போது அந்நிய முதலீட்டாளா்கள் நிகர அடிப்படையில் ரூ.110.85 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியதாக சந்தை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com