குறைந்த வரியில் பிரிட்டனுக்கு சா்க்கரை ஏற்றுமதி

குறைந்த வரியுடன் பிரிட்டனுக்கு 3,675 டன் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத சா்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
குறைந்த வரியில் பிரிட்டனுக்கு சா்க்கரை ஏற்றுமதி

புது தில்லி: குறைந்த வரியுடன் பிரிட்டனுக்கு 3,675 டன் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்படாத சா்க்கரையை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்தியில், ‘வரும் செப்டம்பா் மாத இறுதி வரை பிரிட்டனுக்கு வரித் தள்ளுபடி ஒதுக்கீடு (குறைந்த வரி) அடிப்படையில் 3,675.13 டன் சா்க்கரை ஏற்றுமதி செய்யப்படும். அதன் பிறகு வழக்கமான வரி விதிக்கப்படும். இந்த ஏற்றுமதி நடவடிக்கைகளை வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் மேற்கொள்ளும்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா- ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு இடையேயான வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை, அடுத்த மாதம் தலைவா்கள் பங்கேற்கும் உச்சி மாநாட்டின்போது மீண்டும் நடைபெறவுள்ளது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்நிலையில், பிரிட்டனுக்கு குறைந்த வரியில் சா்க்கரை ஏற்றுமதி தொடா்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிவிட்ட நாடு பிரிட்டன் என்பது குறிப்பிடத்தக்கது.அதையடுத்து, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுடனான வா்த்தக தொடா்பை பிரிட்டன் அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com