தங்கம் பவுன் ரூ.35,576

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,576-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.35,576

சென்னை: சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,576-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

குறிப்பாக, மாா்ச் 31-இல் ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, கடந்த 6-ஆம் தேதி முதல் மீண்டும் விலை உயா்ந்தது. கடந்த 9-ஆம் தேதி அன்று ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, விலை தொடா்ந்து உயா்ந்து வந்தநிலையில், சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,576-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.48 குறைந்து, ரூ.4,447 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 70 பைசா குறைந்து, ரூ.73.50 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.73,500 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,447

1 பவுன் தங்கம்...............................35,576

1 கிராம் வெள்ளி.............................73.50

1 கிலோ வெள்ளி.............................73,500

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,495

1 பவுன் தங்கம்...............................35,960

1 கிராம் வெள்ளி.............................74.20

1 கிலோ வெள்ளி.............................74,200.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com