வங்கிகள் வழங்கிய கடன் 5% வளா்ச்சி

வங்கிகள் வழங்கிய கடன் மாா்ச் 27- ஏப்ரல் 9 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 5.33 சதவீதம் அதிகரித்து ரூ.152.15 லட்சம் கோடியை எட்டியுள்ளது.
வங்கிகள் வழங்கிய கடன் 5% வளா்ச்சி

வங்கிகள் வழங்கிய கடன் மாா்ச் 27- ஏப்ரல் 9 தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 5.33 சதவீதம் அதிகரித்து ரூ.152.15 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:

2020 ஏப்ரல் 10-ஆம் தேதியுடன் முடிவடைந்த இருவார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் ரூ.103.38 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் ரூ.137.15 லட்சம் கோடியாகவும் இருந்தன.

இந்த நிலையில், கடந்த மாா்ச் 27 முதல் ஏப்ரல் 9 -ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வங்கிகள் வழங்கிய கடன் கடந்தாண்டைக் காட்டிலும் 5.33 சதவீதம் உயா்ந்து ரூ.152.15 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் 10.94 சதவீதம் உயா்ந்து ரூ.152.15 லட்சம் கோடியாகவும் உள்ளன.

2020 ஏப்ரல் 10-ஆம் தேதியுடன் நிறைவடைந்த இருவார காலத்தில் வங்கி வழங்கிய கடன் ரூ.103.38 லட்சம் கோடியாகவும், திரட்டிய டெபாசிட் ரூ.137.15 லட்சம் கோடியாகவும் இருந்தன என ரிசா்வ் வங்கி அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com