தங்கம் பவுன் ரூ.35,440

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.35,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ.35,440

சென்னை: சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.35,440-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பின்னா், விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது.

இதன்படி, மாா்ச் 31-இல் ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, கடந்த 6-ஆம் தேதி முதல் மீண்டும் தங்கம் விலை உயா்ந்தது. குறிப்பாக, 9-ஆம் தேதி ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.35 ஆயிரத்தையும், கடந்த 21-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை குறைந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.280 குறைந்து, ரூ.35,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.35 குறைந்து, ரூ.4,430 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 70 பைசா குறைந்து, ரூ.73.30 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.700 குறைந்து ரூ.73,300 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,430

1 பவுன் தங்கம்...............................35,440

1 கிராம் வெள்ளி.............................73.30

1 கிலோ வெள்ளி.............................73,300

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,465

1 பவுன் தங்கம்...............................35,720

1 கிராம் வெள்ளி.............................74.00

1 கிலோ வெள்ளி.............................74,000.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com