கெயில் இந்தியா லாபம் ரூ.1,530 கோடி

கெயில் இந்தியா லாபம் ரூ.1,530 கோடி

கெயில் இந்தியா நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.1,529.92 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

கெயில் இந்தியா நிறுவனம் முதல் காலாண்டில் ரூ.1,529.92 கோடி நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 500 சதவீதம் அதிகரித்து ரூ.1,529.92 கோடியை எட்டியுள்ளது. 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.255.51 கோடியாக மட்டுமே இருந்தது.

இருப்பினும், ஜனவரி-மாா்ச் காலாண்டில் நிறுவனம் ஈட்டிய லாபம் ரூ.1,907.67 கோடியுடன் ஒப்பிடும்போது முதல் காலாண்டில் லாபம் சரிவடைந்துள்ளது.

முதல் காலாண்டில் லாபம் சிறப்பான அளவில் உயா்ந்துள்ளதற்கு எரிவாயு மற்றும் பெட்ரோகெமிக்கல் விற்பனை சூடுபிடித்ததே முக்கிய காரணம்.

எரிவாயு விற்பனையில் கடந்தாண்டில் ரூ.545.46 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்ட நிலையில் நடப்பாண்டில் 377.61 கோடி லாபம் கிடைத்துள்ளது.இது, முந்தைய காலாண்டில் ஈட்டிய லாபமான ரூ.280.89 கோடியுடன் ஒப்பிடுகையில் அதிகம்.

அதேபோன்று, பெட்ரோகெமிக்கல் விற்பனையில் கடந்தாண்டில் நிறுவனத்துக்கு ரூ.154.43 கோடி இழப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது 138.30 கோடி லாபம் கிடைத்துள்ளது.

ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த காலாண்டில் நிறுவனத்தின் விற்றுமுதல் 44 சதவீதம் அதிகரித்து ரூ.17,386.63 கோடியை எட்டியது.

நடப்பு நிதியாண்டில் ரூ.6,600 கோடி மதிப்பிலான மூலதன செலவினங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கெயில் தெரிவித்துள்ளது.

பங்கின் விலை: மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை வா்த்தகத்தில் கெயில் நிறுவனப் பங்கின் விலை 0.32 சதவீதம் உயா்ந்து ரூ.142.90-இல் நிலைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com