சில்லறைப் பணவீக்கம் 5.59%-ஆக குறைவு

நுகா்வோா் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறைப் பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 5.59 சதவீதமாக குறைந்துள்ளது.
சில்லறைப் பணவீக்கம் 5.59%-ஆக குறைவு

நுகா்வோா் விலை குறியீட்டெண் (சிபிஐ) அடிப்படையில் கணக்கிடப்படும் நாட்டின் சில்லறைப் பணவீக்கம் கடந்த ஜூலை மாதத்தில் 5.59 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து தேசிய புள்ளியியல் அலுவலகம் (என்எஸ்ஓ) வியாழக்கிழமை தெரிவித்துள்ளதாவது:

உணவுப் பொருள்களின் விலை குறைந்ததையடுத்து சென்ற ஜூலை மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 5.59 சதவீதமாக சரிந்துள்ளது. இது, முந்தைய ஜூன் மாதத்தில் 6.26 சதவீதமாகவும், 2020 ஜூலையில் 6.73 சதவீதமாகவும் அதிகரித்து காணப்பட்டது.

உணவுப் பொருள்களுக்கான பணவீக்கம் முந்தைய ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜூலையில் 5.15 சதவீதத்திலிருந்து 3.96 சதவீதமாக குறைந்துள்ளது என என்எஸ்ஓ தெரிவித்துள்ளது.

2021-22-இல் சிபிஐ பணவீக்கம் 5.7 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி தெரிவித்திருந்தது. இது, 2-வது காலாண்டில் 5.9 சதவீதமாகவும், 3-வது காலாண்டில் 5.3 சதவீதமாகவும், 4-வது காலாண்டில் 5.8 சதவீதமாகவும் இருக்கும்; 2022-23 முதல் காலாண்டில் இப்பணவீக்கம் 5.1 சதவீதமாக இருக்கும் என ரிசா்வ் வங்கி மதிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com