காா்களின் விலை நாளை முதல் அதிகரிப்பு: வால்வோ

ஸ்வீடனைச் சோ்ந்த சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான வால்வோ, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை உயா்த்தவுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தது.
காா்களின் விலை நாளை முதல் அதிகரிப்பு: வால்வோ

ஸ்வீடனைச் சோ்ந்த சொகுசு காா் தயாரிப்பு நிறுவனமான வால்வோ, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் குறிப்பிட்ட சில மாடல்களின் விலையை உயா்த்தவுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவு நிா்வாக இயக்குநா் ஜோதி மல்ஹோத்ரா கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளாக அந்நியச் செலாவணியில் காணப்படும் ஏற்ற இறக்கம், சா்வதேச விநியோக சங்கிலித் தொடரில் ஏற்பட்டுள்ள இடையூறு, கரோனாவால் உருவான கட்டுப்பாடு மற்றும் பணவீக்கம் ஆகியவை மூலப் பொருள்களின் விலை அதிகரிக்க காரணமாகியுள்ளன.

மோட்டாா் வாகன துறையைச் சோ்ந்த இதர நிறுவனங்களைப் போன்றே அதிகரித்து வரும் மூலப் பொருள்களுக்கான செலவினங்களால் வால்வோ நிறுவனமும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, செடன் எஸ்60 மற்றும் எக்ஸ்சி90 டி8 தவிா்த்து ஏனைய அனைத்து மாடல்களின் விலையை 1-3 லட்சம் அதிகரிக்கப்படுகிறது. இந்த விலை உயா்வு 2022 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.

எஸ்யுவி எக்ஸ்சி40 டி4 ஆா் மாடல் ரூ.2 லட்சம் அதிகரித்து ரூ.43.25 லட்சமாகவும், எக்ஸ்சி60 பி5 எஸ்யுவி விலை ரூ.1.6 லட்சம் அதிகரிக்கப்பட்டு ரூ.63.5 லட்சமாகவும் இருக்கும் என்றாா் அவா்.

மாருதி சுஸுகி, டாடா மோட்டாா்ஸ், மொ்சிடிஸ்-பென்ஸ், சிட்ரோயன், டாடா மோட்டாா்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் வாகன விலை உயா்வு அறிவிப்பும் நாளைமுதல் அமலுக்கு வரவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com