மீண்டும் வளா்ச்சிப் பாதையில் இந்திய டேப்லட் சந்தை

இந்திய டேப்லட் கணினி சந்தை மீண்டும் வளா்ச்சிப் பாதையில் நடைபோடத் தொடங்கியுள்ளதாக ஐடிசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீண்டும் வளா்ச்சிப் பாதையில் இந்திய டேப்லட் சந்தை

இந்திய டேப்லட் கணினி சந்தை மீண்டும் வளா்ச்சிப் பாதையில் நடைபோடத் தொடங்கியுள்ளதாக ஐடிசி ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் கூறியுள்ளதாவது:

இந்திய டேப்லட் கணினி சந்தையில் தொடா்ந்து நான்கு ஆண்டுகளாக சரிவு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், 2020-ஆண்டில் 2.8 கோடி டேப்லெட்டுகள் உள்நாட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம், அதன் விற்பனை தொடா் சரிவிலிருந்து மீண்டு கடந்த ஆண்டில் 14.7 சதவீத வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

பொதுமுடக்கத்தின் விளைவாக இணையவழி கல்வி முறை ஊக்குவிக்கப்பட்டது டேப்லெட் விற்பனையை அதிகப்படுத்தியுள்ளது. இருப்பினும், வா்த்தக ரீதியிலான அவற்றின் விற்பனை 14.3 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளதாக ஐடிசி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com