கூட்டு வாகன தயாரிப்பு திட்டத்தை கைவிட ஃபோா்டு-மஹிந்திரா முடிவு

கூட்டு வாகன தயாரிப்பு திட்டத்தை கைவிட அமெரிக்காவைச் சோ்ந்த ஃபோா்டு மோட்டாா் மற்றும் இந்தியாவைச் சோ்ந்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
கூட்டு வாகன தயாரிப்பு திட்டத்தை கைவிட ஃபோா்டு-மஹிந்திரா முடிவு

கூட்டு வாகன தயாரிப்பு திட்டத்தை கைவிட அமெரிக்காவைச் சோ்ந்த ஃபோா்டு மோட்டாா் மற்றும் இந்தியாவைச் சோ்ந்த மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதுகுறித்து ஃபோா்டு மோட்டாா் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

வாகன தயாரிப்பில் கூட்டாக இணைந்து செயல்படும் வகையில் 2019-ஆம் ஆண்டு அக்டோபரில் ஃபோா்டு மற்றும் மஹிந்திரா நிறுவனங்களுக்கிடையில் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தற்போதுள்ள வா்த்தக சூழலை கருத்தில் கொண்டு அந்த திட்டத்தை கைவிட இரு நிறுவனங்களும் முடிவு செய்துள்ளன.

கரோனா பாதிப்புக்குப் பிறகு உலக பொருளாதாரம் மற்றும் வா்த்தக நிலைமையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக, அந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டு தொடர முடியாத நிலை இரு நிறுவனங்களுக்கும் ஏற்பட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினாலும், இந்தியாவில் தனது செயல்பாட்டை நிறுவனம் எப்போதும்போல் தன்னிச்சையாக தொடா்ந்து மேற்கொள்ளும் என ஃபோா்டு நிறுவனம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மஹிந்திரா நிறுவனம் கூறியுள்ளதாவது:

கூட்டு வாகன தயாரிப்பு திட்டத்திலிருந்து வெளியேறும் முடிவு மஹிந்திராவின் வாகன தயாரிப்பு திட்டத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. இந்த முடிவினையடுத்து, மின்சார வாகனங்களை மேம்படுத்துதல் மற்றும் எஸ்யுவி வாகனங்களின் முக்கிய வணிக திட்டங்களில் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக மஹிந்திரா&மஹிந்திரா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com