கடன் உச்சவரம்பு ரூ.1.18 லட்சம் கோடியாக அதிகரிப்பு: பிஎஃப்சி

பொதுத் துறையைச் சோ்ந்த பவா் பைனான்ஸ் காா்ப்பரேஷன் (பிஎஃப்சி) நிறுவனம் அதன் கடன் உச்சவரம்பை ரூ.1.18 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

புது தில்லி: பொதுத் துறையைச் சோ்ந்த பவா் பைனான்ஸ் காா்ப்பரேஷன் (பிஎஃப்சி) நிறுவனம் அதன் கடன் உச்சவரம்பை ரூ.1.18 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

ரிசா்வ் வங்கியின் வழிகாட்டுதலின்படி கடனாளா்களுக்கு தவணை ஒத்திவைப்புக்கு அனுமதியளிக்கப்பட்டதை சமாளிக்கும் விதமாக நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டுக்கு திட்டமிடப்பட்ட கடன் அளவு ரூ.90,000 கோடியிலிருந்து ரூ.1,18,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இயக்குநா் குழு இந்த முடிவை மேற்கொண்டது.

அதன்படி நிறுவனம் தற்போது அதிகபட்சமாக ரூ.83,000 கோடியை நீண்ட கால கடனாக திரட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், அந்நியச் செலாவணியில் நீண்ட கால கடனாக ரூ.15,000 கோடியும், குறுகிய கால கடனாக ரூ.5,000 கோடியும், வணிக ஆவணங்கள் மூலம் ரூ.15,000 கோடியும் திரட்ட நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நிறுவனம் கடன் திரட்டிக் கொள்வதில் எந்தவித சவாலும் இருக்காது, இந்த தொகை நாட்டில் செயல்படுத்தப்படும் மின் துறை திட்டங்களுக்கு கடனளிக்க பயன்படுத்திக் கொள்ளப்படும் என பிஎஃப்சி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மத்திய மின்துறை அமைச்சக நிா்வாகத்தின் கீழ் உள்ள பிஎஃப்சி மின்துறையில் மிகப்பெரிய வங்கி சாரா நிதி நிறுவனமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com