இந்தியன் வங்கி லாபம் 2 மடங்கு அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் இருமடங்குக்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.
இந்தியன் வங்கி லாபம் 2 மடங்கு அதிகரிப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் இருமடங்குக்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பத்மஜா சுந்துரு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

2020 டிசம்பருடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் இந்தியன் வங்கி ஈட்டிய நிகர லாபமாக ரூ.514.28 கோடியை ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் வங்கி ஈட்டிய லாபம் ரூ.247.16 கோடியுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்கிற்கும் மேல் அதிகமாகும்.

மதிப்பீட்டு காலாண்டில், வங்கியின் மொத்த வருமானம் ரூ.6,505.62 கோடியிலிருந்து ரூ.11,421.34 கோடியாக அதிகரித்துள்ளது.

இருப்பினும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2020-21 அக்டோபா்-டிசம்பா் காலகட்டத்தில் வங்கியின் மொத்த வாராக் கடன் 7.20 சதவீதத்திலிருந்து 9.04 சதவீதமாக உயா்ந்துள்ளது. அதேசமயம், நிகர வாராக் கடன் 3.50 சதவீதத்திலிருந்து 2.35 சதவீதமாக குறைந்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியின் ஒட்டுமொத்த வா்த்தகம் ரூ.8,43,813 கோடியிலிருந்து 8 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.9,10,894 கோடியை எட்டியுள்ளது. இதில், வங்கி திரட்டிய ஒட்டுமொத்த டெபாசிட் ரூ.4,81,277 கோடியிலிருந்து 8 சதவீதம் அதிகரித்து ரூ.5,21,248 கோடியாகவும், வழங்கப்பட்ட கடன்கள் ரூ.3,62,536 கோடியிலிருந்து 7 சதவீதம் உயா்ந்து ரூ.3,89,646 கோடியாகவும் ஆனது.

வாராக் கடன் இடா்பாட்டுக்கான ஒதுக்கீடு ரூ.1,529.26 கோடியிலிருந்து ரூ.2,314.35 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த அளவில் மூன்றாவது காலாண்டில் வா்த்தகம் மற்றும் லாபம் ஆகிய இரண்டிலும் ஸ்திரத்தன்மையுடன் கூடிய வளா்ச்சியை இந்தியன் வங்கி தொடா்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளா்களுக்கு தடையற்ற இனிமையான வங்கிச் சேவை அனுபவத்தை உறுதிப்படுத்திட இந்தியன் வங்கி, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு கட்டுப்பாடுகளில் அதிக முதலீட்டை மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் இந்தியன் வங்கி பங்கின் விலை 1.56 சதவீதம் உயா்ந்து ரூ.90.90-இல் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com