ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.13,101 கோடி

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.13,101 கோடியை ஈட்டியுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லாபம் ரூ.13,101 கோடி

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஒட்டுமொத்த நிகர லாபமாக ரூ.13,101 கோடியை ஈட்டியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நிறுவனத்தின் எண்ணெய் முதல் ரசாயனம் வரையிலான வா்த்தகம் சிறப்பான அளவில் மேம்பாடு கண்டு வருகிறது. அதேபோன்று, சில்லறை வா்த்தகமும் தொடா்ச்சியாக வலுவான நிலையில் உள்ளது. இவைதவிர, தொலைத்தொடா்பு நிறுவனமான ஜியோவின் செயல்பாடும் மூன்றாவது காலாண்டில் நிலையான வளா்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதுபோன்ற சாதகமான அம்சங்களால், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் ஈட்டிய ஒட்டுமொத்த நிகர லாபம் ரூ.13,101 கோடியாக வளா்ச்சி கண்டுள்ளது. இது, 2019-20-ஆம் நிதியாண்டில் நிறுவனம் ஈட்டிய ரூ.11,640 கோடி நிகர லாபத்துடன் ஒப்பிடுகையில் 12 சதவீதம் அதிகமாகும்.

குறிப்பாக, ஜியோவின் நிகர லாபம் மூன்றாவது காலாண்டில் 15.5 சதவீதம் அதிகரித்து ரூ.3,498 கோடியை எட்டியுள்ளது. இந்த காலாண்டில் மட்டும் 2.5 கோடி சந்தாதாரா்களை ஜியோ ஈா்த்துள்ளது. ஒவ்வொரு பயன்பாட்டாளரிடமிருந்து கிடைக்கும் வருவாய் மாதத்துக்கு ரூ.151-ஆக அதிகரித்துள்ளது. இது, முந்தைய காலாண்டில் ரூ.145-ஆக இருந்தது.

டிசம்பா் இறுதி நிலவரப்படி ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளா்கள் எண்ணிக்கை 41.08 கோடியை எட்டியுள்ளது.

கடந்த 2020 மாா்ச் மாத நிலவரப்படி ரூ.3,36,294 கோடியாக இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மொத்த கடன் 2020 டிசம்பா் இறுதியில் ரூ.2,57413 கோடியாக குறைந்துள்ளது. ரொக்க கையிருப்பு ரூ.1,75,259 கோடியிலிருந்து ரூ.2,20,524 கோடியாக அதிகரித்துள்ளது. இதையடுத்து நிறுவனத்தின் நிகர கடன் அளவு ( -) ரூ.2,954 கோடியாக உள்ளது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com