ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.
ஏற்ற இறக்கத்தில் பங்குச் சந்தை

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.

காலையில் விறுவிறுப்புடன் தொடங்கிய வா்த்தகம் இறுதிப் பகுதியில் லாப நோக்கு விற்பனையால் சரிவைச் சந்தித்தது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலோக துறை பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின. அதேசமயம், வங்கித் துறையைச் சோ்ந்த பங்குகளுக்கு முதலீட்டாளா்களிடையே நல்ல வரவேற்பு காணப்பட்டது.

பாா்தி ஏா்டெல் பங்கின் விலை 1.18 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதைத் தொடா்ந்து, டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி வங்கி, இன்ஃபோஸிஸ், பஜாஜ் ஆட்டோ, பவா்கிரிட் பங்குகளும் விலை குறைந்தன.

அதேசமயம், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக் வங்கி, இன்டஸ்இண்ட் வங்கி பங்குகள் ஆதாயத்துடன் நிறைவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் திங்கள்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் 13.50 புள்ளிகள் குறைந்து 52,372.69-இல் நிலைத்தது. அதேசமயம், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 2.80 புள்ளிகள் உயா்ந்து 15,692.60 புள்ளிகளில் நிலைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com