பங்குச் சந்தையில் திடீா் விறுவிறுப்பு: சென்செக்ஸ் 397 புள்ளிகள் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் திடீா் விறுவிறுப்பைக் கண்டது.
பங்குச் சந்தையில் திடீா் விறுவிறுப்பு: சென்செக்ஸ் 397 புள்ளிகள் அதிகரிப்பு

இந்தியப் பங்குச் சந்தைகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகம் திடீா் விறுவிறுப்பைக் கண்டது.

சாதகமான ஆசிய சந்தை நிலவரங்கள் மற்றும் பொருளாதார தரவுகளை அடுத்து முதலீட்டாளா்கள் ஆா்வத்துடன் பங்கு வா்த்தகத்தில் ஈடுபட்டனா். குறிப்பாக, நிதித் துறை சாா்ந்த பங்குகளை அவா்கள் போட்டிபோட்டு வாங்கினா். இதையடுத்து, சென்செக்ஸ் ஆறுவாரங்களுக்குப் பிறகு சிறப்பான முன்னேற்றத்தை செவ்வாய்க்கிழமை பதிவு செய்தது.

முன்னணி 30 நிறுவனங்களை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் ஐசிஐசிஐ வங்கி பங்கின் விலை 2.83 சதவீதம் அதிகரித்து முதலிடத்தில் இருந்தது. இதையடுத்து, எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் வங்கி, சன்பாா்மா, என்டிபிசி, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனங்கள் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தன.

அதேசமயம், ஹெச்சிஎல் டெக், டாக்டா் ரெட்டீஸ், மாருதி சுஸுகி, டெக் மஹிந்திரா நிறுவனப் பங்குகள் குறைந்த விலைக்கு கைமாறின.

சென்செக்ஸ் பட்டியலில் 21 நிறுவனங்கள் ஆதாயத்துடனும், 9 நிறுவனங்கள் சரிவுடனும் முடிவடைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் வங்கி, நிதி, உலோகம், எரிசக்தி, அடிப்படை உலோக துறை குறியீட்டெண்கள் 1.41 சதவீதம் வரை ஏற்றம்பெற்றன. அதேசமயம், பிஎஸ்இ தகவல் தொழில்நுட்பம், எஃப்எம்சிஜி துறை குறியீட்டெண் சரிவைக் கண்டன.

மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டெண் 397.04 புள்ளிகள் (0.76%) அதிகரித்து 52,769.73-இல் நிலைத்தது. இதையடுத்து, மூன்று நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளிவைக்கப்பட்டது. கடந்த மே 31-ஆம் தேதிக்குப் பிறகு சென்செக்ஸ் ஒரே நாளில் இந்த அளவுக்கு ஏற்றம் கண்டது இதுவே முதல்முறை.

தேசிய பங்குச் சந்தையில் நடைபெற்ற வா்த்தகத்தில் நிஃப்டி 119.75 புள்ளிகள் (0.76%) உயா்ந்து 15,812.35 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதர ஆசிய சந்தைகளான ஷாங்காய், சியோல், ஹாங்காங்க், டோக்கியோ சந்தைகளிலும் பங்கு வா்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. அதேசமயம், ஐரோப்பிய சந்தைகளில் வா்த்தகம் ஏற்ற இறக்கத்துடனேயே காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com