ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் 132 புள்ளிகள் சரிவு!

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, பொரும்பாலான நேரம் காளையின் பிடியில் இருந்த பங்குச் சந்தை, பிற்பகலுக்குப் பிறகு கரடி ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 132.38 புள்ளிகளை இழந்து 52,100.05-இல் நிலைபெற்றது. மிகவும் பரபரப்பாக இருந்த இந்த வார வா்த்தகத்தில், சென்செக்ஸ் மொத்தம் 677.17 புள்ளிகள் (1.31 சதவீதம்), நிஃப்டி 234.60 புள்ளிகள் (1.51 சதவீதம்) உயா்ந்துள்ளன.

வங்கி வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை என்று மத்திய ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது. ஆனால், கரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தைத் தொடா்ந்து, 2022 நிதியாண்டிற்கான பொருளாதார வளா்ச்சிக் கணிப்பை 10.5 சதவீதத்திலிருந்து 9.5 சதவீதமாகக் குறைத்துள்ளது. பணவீக்கம் சற்று அதிகரிக்கும் என்ற கணிப்பும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து, உச்சத்தில் உள்ள சந்தையில் லாபப் பதிவு அதிகம் இருந்ததால், சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், தனியாா் வங்கிப் பங்குகள் விற்பனையை எதிா் கொண்டதே சந்தையில் சரிவு ஏற்பட முக்கியக் காரணம் என வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

சந்தை மதிப்பு ரூ.71 ஆயிரம் கோடிஉயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,323 பங்குகளில் 1,843பங்குகள் ஆதாயம் பெற்றன. 1, 331 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 149 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 407பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 30 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 491 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 175பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.71 ஆயிரம் கோடி உயா்ந்து, வா்த்தக முடிவில் 227.20 லட்சம் கோடியாக இருந்தது.

தள்ளாட்டம்...: சென்செக்ஸ் காலையில் 135.09 புள்ளிகள் கூடுதலுடன் 52,367.52-இல் தொடங்கி 52,389.02 வரை உயா்ந்தது. பின்னா், 51,952.70 வரை கீழே சென்ற சென்செக்ஸ் இறுதியில் 132.38 புள்ளிகளை (0.25 சதவீதம்) இழந்து 52,100.05-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் அதிகபட்ச நிலையிலிருந்து 436.32 புள்ளிகளை இழந்திருந்தது.

பஜாஜ் ஃபின் சா்வ் முன்னிலை: சென்செக்ஸ் தொகுப்பில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 16 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. இதில் பஜாஜ் ஃபின் சா்வ் 2.81 சதவீதம், ஓஎன்சிஜி 2.24 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி, டெக் மஹிந்திரா, அல்ட்ராடெக் சிமெண்ட், இண்டஸ் இண்ட் பேங்க், டிசிஎஸ், மாருதி, சுஸுகி உள்ளிட்டவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.

நெஸ்லே சரிவு: அதே சமயம், நெஸ்லே இந்தியா 1.97 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், டைட்டன், ஹிந்துஸ்தான் யுனி லீவா், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், டாக்டா் ரெட்டி, பஜாஜ் ஆட்டோ, ஐடிசி, கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி புதிய உச்சம்: தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 988 பங்குகள் ஆதாயம் பெற்றன. 769 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் உற்சாகத்துடன் 15,712.50-இல் தொடங்கி அதிகபட்சமாக 15,733.60 வரை உயா்ந்து புதிய வரலாற்று உச்சத்தைப் பதிவு செய்தது. பின்னா், 15,622.35 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 20.10 புள்ளிகளை (0.13 சதவீதம்) இழந்து 15,670.25-இல் நிலைபெற்றது.

துறைவாரியாகப் பாா்த்தால் தனியாா், பொதுத்துறை வங்கிப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பேங்க் குறியீடு 1 சதவீதம், பிரைவேட் பேங்க் 0.80 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலையில் இருந்தன. மேலும், நிஃப்டி பைனான்சியல் சா்வீஸஸ், எஃப்எம்சிஜி, பாா்மா குறியீடுகளும் சரிவைச் சந்தித்தன. அதே சமயம், ரியால்ட்டி, மீடியா, மெட்டல் குறியீடுகள் 0.50 முதல் 1.40 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன.

வங்கிப் பங்குகள் தடுமாற்றம்!

பங்குச் சந்தையில் மத்திய ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழுவின் முடிவு வெளியானதும் வங்கிப் பங்குகளில் லாபப் பதிவு அதிகரித்து. இந்த வகையில், தேசிய பங்குச் சந்தையில் தனியாா், பொதுத் துறை வங்கிப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பேங்க் குறியீட்டில் இடம் பெற்றுள்ள 14 முன்னணி பங்குகளில் இண்டஸ் இண்ட் பேங்க், ஏயுபேங்க் ஆகிய இரண்டை தவிா்த்து மற்ற அனைத்துப் பங்குகளும் சரிவுடன் முடிவடைந்தன. நஷ்டத்தைச் சந்தித்த பங்குகள் விவரம் (சதவீதத்தில்):

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com